சீன அரசின் ஆதரவு பெற்ற செய்தி ஊடகமான Global Times, இந்தியாவுடனான நெருக்கமான உறவுகளை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை சீனாவிற்கு வலியுறுத்துகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் காரணமாக உலக வர்த்தக சூழல் மாற்றமடைந்துள்ளது. இந்நிலையில், இரு பெரும் பெருளாதார நாடுகளான இந்தியாவும் சீனாவும் போட்டியை தவிர்த்து ஒத்துழைப்பை மேம்படுத்தவேண்டும் என கூறப்படுகிறது.
தற்போதைய சூழலில், இந்தியா-சீனா உறவுகள் புதிய பாதையை தேடுகின்றன.
இரு நாடுகளும் பொருளாதார வளர்ச்சிக்கான சக்திகளை ஒருங்கிணைத்து, பராசபர நனமையை நோக்கி செயல்படுமென குளோபல் டைம்ஸ் கூறுகிறது.
இந்தியாவும் சீனா மீதான நம்பிக்கையை மேம்படுத்தி, கருத்துவேறுபாடுகளை சரிசெய்து ஒத்துழைப்பி விரிவுபடுத்தவேண்டும் என வலியுறுத்துகிறது.
அதேநேரம், இந்தியாவை "வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான கல்லறை" என குளோபல் டைம்ஸ் விமர்சிக்கிறது.
இந்தியாவின் தொழில்நுட்ப பின்னடைவு மூலதன பற்றாக்குறை மற்றும் அடிப்படை வசதிகள் குறைபாடு முதலீட்டாளர்களுக்கு சவாலை இருப்பதாக தெரிவித்துள்ளது.
Make In India போன்ற திட்டங்கள் மட்டும் போதாது, இந்தியா வளர்ச்சியடைய பெரும் முயற்சி தேவைப்படுவதாகவும் கூறுகிறது.
இந்தியா-சீனா உறவுகள் உலக பொருளாதாரத்திற்கே பயனளிக்கக்கூடியது என தெரிவித்திட்டுள்ளது.